ஸ்ரீராமஜெயம்.9788968519. வாட்ஸ் அப்
விளம்பரத்தால்,உங்களை வெளியுலகிற்கு ,வெளிச்சம் போட்டு காட்டும் ராகு .ஏன்? எப்படி?
ராகுவின் குணமே இல்லாததை பெரிதுபடுத்தி, இருப்பதாக காட்டும் தன்மையுடையது. மாயையின் மன்னன் . (பஞ்சு மிட்டாய்,வெங்காயம் போல)

ஒருத்தனை ஏமாத்தனும்னா அவனுடைய ஆசையை தூண்டனும் என்பது போல், பிரம்மாண்ட ,விளம்பர மாயவலைகளை நம்பி, கடைசியில் ஒன்றும் இல்லை என்று, சலித்து புளித்துப் போகக்கூடிய அமைப்பை கொடுப்பது ராகுவின் ஆதிக்கத்தால் உண்டாவது.
ஒரே நாளில் உங்களை ஒபாமா ஆக்குகிறேன் என்று சொல்லி ஓட்டாண்டியாக தெருவில் நிற்க வைப்பதும் ராகுவின் தனித்தன்மை.
நம்பி ஏமாறுவது. நம்ப வைத்து ஏமாற்றுவது.
இதில் கொடுமை என்னவென்றால்,ராகுவால், கொடுக்கப்படும் பில்டப்புகளால், நாம் தெரிந்தே ஏமாறுவதுதான் இதன் Highlight.
4 வாரங்கள், முகப்பூச்சு கலவையை பயன்படுத்தினால் நயன்தாராவுக்கே டப் கொடுக்கலாம் என்பது போன்றும், ஊக்க பானத்தை, ஓரிரு வாரங்கள் குடித்தால், ஒரு இன்ச் வளர்ந்து விடுவோம் நம்புவதும், ராகுவின் மாயவலையால் உண்டாகும் விளம்பர வித்தையே.
இதில் தெரிந்தே தான், நாம் ஏமாறுகிறோம் என்பதில் ஐயமே இல்லை.உண்மைதானே.
அறிவும், திறமையும், இருந்தாலும், குடத்திலிட்ட விளக்கு போல் குன்றிப்போய் உள்ளவனை, விண்ணில் உள்ள விண்மீன் போல், வெளி உலகுக்கு ,
தெரியப்படுத்துவது, விளம்பரப்படுத்துவது, ராகுவின் மாயையால் மட்டுமே முடியும்.
30 நாளில் இந்தி படித்து,
3 ஸ்டேட்டிலும் சரளமாக பேசி பழகலாம் என்றும், ஒரே வாரத்தில் ஜோதிடம் கற்று ,உலகிற்கே வழிகாட்டலாம் என்பதும், நம் பித்தலாட்ட பிரபு , ராகுவின் மாயஜால வேலையே.
ஒன்றுமே இல்லாத (தெரியாத) தற்குறிகளை, சிலநேரங்களில், உயரத்தில் உட்கார வைத்து அழகு பார்ப்பதும் ராகுவின் வேலையே.
கொடுப்பதற்கு நிகராக, ராகு, கெடுப்பதற்கும் தயங்குவதே இல்லை.
குடியானவனை குபேரனாக்கி, புகழின் உச்சிக்குக் கொண்டு செல்வதும், சுப அமைப்பிலுள்ள ராகுவே.
ராகு கொடுக்கும் புகழும் பணமும் நிலையற்றது என்பதால் ,ராகுதசை, எல்லாவற்றையும் கொடுக்கும் பொழுதே , தான தர்ம,அறப்பபணி உதவிகளைச் செய்து, புண்ணியத்தை மேலும் சேர்த்துக் கொள்வது நல்லது.
இல்லை என்றால்,
ராகு திசை முடிந்தவுடன் பலூனில் நிரப்பப்பட்ட காற்று, சிறு ஊசியின் உதவியால்,பிரமாண்ட பலூன் ஒன்றுமில்லாமல் போவது போல் ,ராகு திசை முடிந்தவுடன் , கோமாவில் இருந்து எழுந்தவன் போல், நான் எங்கு இருக்கிறோன் என்பது போல் என்ன வைத்து விடும்.
ஓம் நமசிவாய.
ஜோதிடர் மாரிமுத்து.9788968519.வாட்ஸ் அப்