ஸ்ரீராமஜெயம் 9788968519.வாட்ஸ் அப்.(Must read article)

திருமண ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் சுப கிரகங்கள் இருக்கலாமா? ஏழில் சுப கிரகங்கள் இருப்பதால் நல்ல பலன் என்று எடுத்துக் கொள்ளலாமா?

கண்டிப்பாக இல்லை.

ஜாதகத்தில் 7 ,8ஆம் இடங்களின் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி இன்று ஒரு பதிவு பதிவிட்டிருந்தேன் .அதன் தொடர்ச்சியாக ஏழு ,எட்டாம் இடங்களில், சுப கிரகங்கள் இருந்தால் யோகம் செய்யுமா? அதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

ஜோதிடம் ஒரு முரண்பட்ட சமன்பாடு. விதிகளை விட இங்கு விதி விலக்குகள் தான் அதிகம்.

இயற்கைப் பாவக் கிரகங்கள் களத்திர ஸ்தானத்தில் சுப தொடர்பின்றி வலுவாக இருக்கும் பட்சத்தில் ,எந்த மாதிரியான பிரச்சினையை கொடுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

சரி ,சுபக்கிரகங்கள் இருந்தால் , சொர்க்கம் போல் வாழ்க்கை அமையுமா? என்றால் ,அதுவும் இல்லை என்றுதான் பதில் கூற வேண்டும் .

ஆம்.

இங்கும் சில விதிவிலக்குகள் உள்ளன.

சுப கிரகங்கள் என சொல்லப்படும் குரு , சுக்கிரன், புதன் ,வளர்பிறைச் சந்திரன் களத்ர ஸ்தானத்தில் அமரும் பொழுது ,எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்ப்போம்.

உபய லக்னங்களுக்கு, பெரும்பாலும் சுபகிரகங்கள் கேந்திராதிபத்திய தோஷத்தை பெறும்.

நாம் எல்லோரும் அறிந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகத்தில் மிதுன லக்னம் .மிதுன லக்னத்திற்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் தனித்த குரு.

பாதகாதிபதி, மாரகாதிபதி ,தனித்த குரு என்று பல வழிகளில் ஏழாமிடம் வலுப்பெற்று ,அந்த இடத்தைக் கெடுக்கிறது.

அந்தணன் தனித்து நிற்க அவதிகள் கோடி உண்டாம் என்ற விதிப்படி ,இங்கு ஏழாமிடம் முற்றிலுமாக கெட்டதால், திருமண வாழ்க்கை ,தீ வைத்தது போல் ஆகிவிட்டது.

லக்னத்தை குரு பார்ப்பது சிறப்பு தான்.ஆனால் திருமண வாழ்க்கை???

சரி,மற்றொரு சுப கிரகமான சுக்கிரன்.

சுக்கிரன் களத்திரகாரகன். களத்திரகாரகன் களத்திர ஸ்தானத்தில் தனித்து நின்றால் காரகோ பாவ நாஸ்தி.

உதாரணமாக தனுசு லக்னத்திற்கு ஆறாம் இடத்திற்கும், பதினொன்றாம் இடத்திற்கு அதிபதியான சுக்கிர பகவான், ஏழாமிடத்தில் திருமண ஸ்தானத்தில் தனித்து நின்றால், திருமண வாழ்க்கை தித்திப்பாக இருக்காது. தாமத திருமணத்தை கொடுக்கும்.

இதில் ஏழாமிட அதிபதியான புதனும் கெட்டால் சொல்லவே வேண்டியதில்லை. சுற்றி, சுற்றி அடிக்கும்.

அதுபோல் மேஷ ,விருச்சிக லக்னத்திற்கு ,ஏழில் சுக்கிரன் தனித்து இருப்பது தோஷமே

இங்கு சுப கிரகமான சுக்கிரன் சுபமாக உள்ளது என்று எடுத்துக்கொள்ள முடியாது .

இங்கும் விதிவிலக்கு உண்டு .

அதை புரிந்து கொள்ளவே இந்த விதி சொல்லப்படுகிறது.

அடுத்து புதன்.

புதன் கேந்திராதிபத்திய தோஷத்திற்கு உட்பட்ட கிரகம் என்பதால் குருவிற்கு ஏற்படும் அதே நிலை புதனுக்கும் உண்டு.

கடைசியாக சந்திரன் .தனுசு லக்னத்திற்கு எட்டாம் அதிபதியாகிய சந்திரன் களத்திர ஸ்தானத்தில் நிற்பது நல்ல அமைப்பல்ல.

அதுபோல் கும்ப லக்கினத்திற்கு ஆறாம் அதிபதியான சந்திரன் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் நிற்பதும் நல்ல அமைப்பல்ல.

இங்கு ஏழாம் அதிபதியாகிய சூரியன் 7ம் இடத்தில் இருந்து, ஆறாம் இடத்து அதிபதியான சந்திரன் அதனுடன் இணையும் பொழுது, ஏழாமிடம் அமாவாசை அமைப்பை பெறும் .இந்த அமைப்பில் திருமண ஸ்தானம் முற்றிலும் பலமிழக்கும்.

தனுசு லக்கினத்திற்கு ஏழாம் அதிபதியான புதனும் ,அட்டம அதிபதியான சந்திரனும் இணைந்து ஏழாம் இடத்தில் இருப்பது கடுமையான களத்திர தோஷத்தை உண்டாக்கும்.

ஜாதகத்தில் ஏழாம் அதிபதி வாங்கி நிற்கும் சாரத்தையும் , ஏழில் நிற்கும் கிரகம் வாங்கியுள்ள சாரத்தையும் கவனித்து அதற்கு ஏற்றார்போல் ஜாதகத்தை இணைக்க வேண்டும்

ஜாதகத்தில் சாதக பாதக விஷயங்களை அறிந்து அதற்கேற்றபடி ஜாதகத்தை இணைப்பதும் நல்ல பலனை கொடுக்கும்.

ஓம் நமசிவாய.

ஜோதிடர் மாரிமுத்து.9788968519. வாட்ஸ் அப்.